வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்!!(படங்கள்)

583

வவுனியாவில் சிங்கள மொழி மூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் இன்று(22.09) ஈடுபட்டனர்.

வவுனியா தெற்கு மற்றும் வெலிஓயா கல்வி வலயங்களில் சிங்கள பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சிங்கள மொழிமூல ஆசிரியர்களே தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 பேர் வரையில் வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தம்மை ஆசிரியா சேவை 3.2 இல் உள்வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை சுமார் 2 மணி நேரம் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

11940219_407759326084055_891201197_n 12023194_407759056084082_1841964229_n 12026632_407759512750703_776902672_n 12026649_407759449417376_1413061603_n 12029200_407760362750618_909148109_n 12030902_407759032750751_2024753375_n 12033742_407759426084045_1712790363_n