சுற்றுலா சென்று திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

383

canada woman

அப்பிள் நிறுவனத்தின் ஐடியூன் சேவைக்கு சுமார் 3000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளின் தாயான பவுலா மார்னர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அத்துடன் அயலவர்களை பிரமிப்படையச் செய்துள்ளார்.

கனடாவை சேர்ந்த இவர் எந்தவொரு கணனி அப்பிளிக்கேஷன்களையும் பணம் கொடுத்து வாங்கக்கூடாது என்று தனது பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தெரிவித்துள்ளதுடன் அயலவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துள்ளாராம்.

இங்கிலாந்திற்கு சுற்றுலா ஒன்றிற்கு சென்ற வேளையில் தனது மகன்மார் இருவரையும் ஐபொட், ஐபேட் என்பவற்றினை பயன்படுத்தி இலவசமாக கிடைக்கும் ஹேம்களை விளையாட அனுமதித்துள்ளார்.

இதேவேளை 7 வயதான குழந்தைகள் இருவரும் தம்மை அறியாமலேயே சில அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்வதற்கு பணம் செலுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் கனடாவிற்கு திரும்பிய பவுலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, ஐடியூனில் அப்பிளிக்கேஷன்களை 3000 டொலர் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்தமைக்கான பற்றுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.