7.2 கோடி வயதுடைய டைனோசரின் வால் சிக்கியது உடம்பு எங்கே?? (படங்கள் இணைப்பு)

511

மெக்சிகோ நாட்டு பாலைவனம் ஒன்றில் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் வால் பகுதி படிமமாக கிடைத்துள்ளது. அந்த வாலுக்குரிய டைனோசரின் உடல் எங்கேயாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மிகவும் அரிதாக இந்த வால் பகுதியானது முழுமையாக, பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவில் டைனோசரின் படிமம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த டைனோசர் வாலானது, பாசில் எனப்படும் படிம வடிவில் கிடைத்துள்ளது. வடக்கு மெக்சிகோவில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த படிமம் காணப்படுகிறது. இந்த வால் பகுதியானது 5 அடி நீளத்திற்கு உள்ளது. மெக்சிகோவில் கிடைத்த முதல் டைனோசர் படிமம் இதுதான்.

இது டைனோசரின் ஒரு வடிவமான ஹாட்ரசோர் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.இதன் வால் பகுதியானது துண்டாகவில்லை. மாறாக முழுமையாக அப்படியே கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்கள் கஷ்டப்பட்டு மண்ணைத் தோண்டி இந்த படிமத்தை தற்போது முழுமையாக வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

வால் பகுதியின் எலும்புகள் அப்படியே கல்லாகியுள்ளன. பாறை வடிவில் காணப்படும் இவை அனைத்தும் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளன. வால் பகுதிக்கு அருகில் சில எலும்புகள் சிதறிக் கிடந்தன. அவை அந்த டைனோசரின் இடுப்பு பகுதி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் வாய்ப் பகுதியில் ஆயிரக்கணக்கில் பற்கள் இருந்ததாம். இந்த பற்களை வைத்து தான் உண்ணும் ஆகாரத்தை முதலில் நன்றாக பொடித்து கூழாக்கி விடுமாம் இந்த டைனோசர். பிறகுதான் வயிற்றுக்குள் தள்ளுமாம்.

du6 du5 di d4 d3 d2