எங்கள் ரத்தத்தைக் உறிஞ்ச வந்த புதிய அட்டை வில்லியமின் குழந்தை – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!!

350

russia

ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்க்கிறேன். இந்தக் குழந்தையை நான் வெறுக்கிறேன் என்று கடுமையாக பேசியுள்ளார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி.

ரஷ்யர்களின் ரத்தத்தை மேலும் உறிஞ்சுவதற்காகத்தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் வர்ணித்துள்ளார். ரஷ்ய அரசியலில் கரடு முரடான அரசியல்வாதியாக வலம் வரும் ஜிரினோவ்ஸ்கி இப்படிப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜிரினோவ்ஸ்கி கூறுகையில் 21ம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் குழந்தையாக இது இருக்கப் போகிறது. எனவே இதன் பிறப்பை ரஷ்யர்கள் கொண்டாடக் கூடாது, வரவேற்கக் கூடாது.

இந்தக் குழந்தை பிறப்பு குறித்து நான் கவலைப்படவே இல்லை. இது ரஷ்யர்களை அழிக்க வந்துள்ள குழந்தை. ரஷ்யாவை அழித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். எனவேதான் இந்தக் குழந்தையின் பிறப்பை எங்களால் கொண்டாட முடியவில்லை. எங்களது ரத்தத்தைக் குடிக்க வந்திருக்கும் புதிய அட்டையாகத்தான் இந்தக் குழந்தையை நான் பார்க்கிறேன் என்றார் அவர்.

ஆனால் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை வரவேற்றுள்ளது ரஷ்ய அரசு. இதுதொடர்பாக வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத்துக்கு ரஷ்ய அரசு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ராஜ குடும்பங்களுக்கு இடையே முன்பு உறவு இருந்தது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் மூலமாக வந்த உறவு இது. இவர் இரண்டாம் ஜோர் மன்னன் நிக்லஸின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

1917ம் ஆண்டு ரஷ்யாவில் ரோமனோவ் வம்சம் அழிந்ததற்குக் காரணமே ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர்தான் என்பது பல ரஷ்யர்களின் குற்றச்சாட்டாகும். 2ம் ஜோர் மன்னன் நிக்லஸ் அந்த சமயத்தில் ரமனோவ் வம்சத்தின் ஆட்சியை எடுத்து நடத்த முடியாத நிலையில் இருந்தார்.

இதையடுத்து தனது சகோதரரான இங்கிலாந்தின் இளவரசர் மிக்கேல் அலெக்சாண்ட்ரோவிச்சிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அதன் பிறகு ஆளுநரை நியமித்தார் மிக்கேல். அத்தோடு ரோமனோவ் வம்த்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.