மாகாண சபை வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்..!

437

votingவடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது மனுக்களை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி மதியம் 12 மணிவரை சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தினை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தேர்தல்கள் செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்படும்.

இதேவேளை, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு சகல தேர்தல் செயலகங்களை அண்டிய பகுதிகளிலும் கடும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.