வவுனியா புளியங்குளம் வாகனவிபத்தில் இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை..!

530

bodyவவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புளியங்குளம் பிரதேச போலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜமால் அவர்கள்,

மரணமடைந்தவர் சும்மார் 50 வயதுகள் மதிக்கத்தக்கவர் என்றும் இவர் 5 அடி 8 அங்குலம் உயரமுடையவர் என்றும் தெரிவித்தார். இவரது சடலம் வவுனியா பொது வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.