தனி நிலா கொண்ட விண்கல் பூமியை கடந்து சென்றுள்ளது

427

சுமார் மூன்று கிலோமீட்டர் விட்டம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு அருகே வந்து சென்றுள்ளது.

பூமியை நிலா சுற்றிவருவதுபோல இந்த விண்கல்லுக்கும் நிலவொன்று உண்டு.

1998 கியு ஈ 2 என்று பெயரிடப்படுள்ள இந்த விண்கல் பூமிக்கு அருகாக வருவதால் இது பற்றி விஞ்ஞானிகள் கூடுதலாக ஆராய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பூமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படுத்தாதபடிக்கு அறுபது லட்சம் கிலோமீட்டர் தூரத்தில்தான் இந்த விண்கல் தற்போது பூமியைக் கடந்துள்ளது.

இந்த விண்கல் எந்த கனிமத்தால் ஆனது என்றும், பிரபஞ்சத்தில் எப்படியான இடத்தில் இது உருவானது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வெறும் கண்ணால் பார்ப்பவர்களுக்கு இந்த விண்கல் தெரியாது என்றாலும் டெலெஸ்கோப் தொலைநோக்கி வைத்திருப்பவர்கள் இதனைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.