ஸ்பெயினில் ரயில் தடம்புரண்டு 70 பேர் உயிரிழப்பு!!(படங்கள்)

372

ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்ரிட் நகரத்துக்கும் ஃபெர்ரோல் நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த ரயில்சந்தியானோ த கொம்போஸ்தலா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திலிருந்து தடம் மாறியது.

விபத்துக்குள்ளான நேரத்தில் அந்த ரயிலில் 220 பேர் பயணம் செய்தனர்.
ஸ்பெயினைப் பொறுத்தவரை பல தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய ரயில் விபத்து இது.

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிடவுள்ளார். அவர் சந்தியாகோத கொம்போஸ்தலாவில் பிறந்தவர்.

அந்த ஊரில் இன்று வியாழனன்று வருடாந்த கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை முன்னிட்டு கத்தோலிக்க யாத்ரீகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த விபத்தினால் வைபவ நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

train crash  3 4 Injured ictims are helped from the scene of the crash outside Santiago de Compostela.

26