24 மாடி ஜன்னலில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமியின் கடைசி நிமிடங்கள்!!(படங்கள்)

389

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக 24 வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுமி பெரும் போராட்டத்திற்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில் உள்ளது பிரபல அடுக்குமாடி குடியிருப்பு. அதன் 24வது மாடியில் 5 வயது மகளுடன் வசித்து வருகின்றனர் ஒரு தம்பதி. தந்தை பணிக்கு சென்று விட தாயும் முக்கிய வேலையாக வெளியில் சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமி தவறுதலாக ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் வெளியில் வந்து விட்டார். மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்த போது தலை கம்பிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. பயத்தில் அலறி இருக்கிறார் சிறுமி.

வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்ணின் காதில் சிறுமியின் அழுகுரல் சத்தம் விழுந்திருக்கிறது. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என அஞ்சிய படியே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த அவர் அப்படியே உறைந்து விட்டார்.

காரணம் 79ன் அடி உயரத்தில் 5 வயது பக்கத்துவீட்டு சிறுமி ஜன்னல் கம்பிகளுக்குள் மாட்டியபடி கதறிக் கொண்டிருந்தது தான். உடனடியாக போலீசுக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார் அப்பெண்.

அதற்குள் கீழே கூட்டம் கூடி விட தீயணைப்புத் துறையினர் உட்புறமாக தாளிடப்பட்டிருந்த சிறுமியின் வீட்டுக் கதவை திறக்க ஒருபுறமும், மறுபுறம் பக்கத்து வீட்டு ஜன்னல் கம்பிகளை உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இரண்டு முயற்சிகளுமே வெற்றி பெற பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக இடுப்பில் கயிறு கட்டிய படி ஒருவர் சிறுமியை நெறுங்கினார். அதற்குள் வீட்டிற்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுமி கீழே விழுந்து விடாத வண்ணம் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டனர்.

ஒரு வழியாக பெரும் போராட்டத்திற்குப் பின் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். தகவலறிந்து ஓடி வந்த சிறுமியின் பெற்றோருக்கு அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

மரணத்தின் வாசல் வரை போய் பார்த்து விட்டு வந்த அச்சத்தில் அச்சிறுமி மிரண்டு காணப்பட்டார். சிறு குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஓர் உதாரணம்.

c1 c2 c3 c4 c5