வவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா டிப்போக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது.
நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில்காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 48அகவையுடைய ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.