சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மிரிஸ்ஸ கடற்பரப்பில் ஊடாக இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.