ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் அமைப்புகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சாதத் மருத்துவமனையில் கடந்த 24ம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான விஷயமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இக்குழந்தை மற்றும் அதன் தாய் ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குழந்தையை எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் இக்குழந்தைக்கு இரண்டு தலையுடன், இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் மண்டலம், இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரே ஒரு இடுப்பு எலும்பு உள்ளது. குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.