நீண்ட நேரம் இணையத்தளம் பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

348

girl-at-computer

இணையப்பாவனையானது தற்போது அனேகமானவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் இணையத்திலேயே தமது நேரம் முழுவதையும் செலவிடுவபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த உளவியலாளரான வைத்தியர் ரிம் ஷார்ப் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இவ்வாறானவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

அதாவது நீண்ட நேரமாக இணையத்தளத்தை பாவிப்பவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்காக 16 வயதிற்கும், 34 வயதிற்கும் இடைப்பட்ட 1029 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 வீதமானவர்கள் நாள் ஒன்றிற்கு 21 மணித்தியாலங்கள் இணையத்துடன் இருக்கின்றனர் என்றும் இந்த வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் சராசரியாக 18 மணித்தியாலங்கள் இணையத்துடன் இருக்கின்றனர் என்றும் குறித்த ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர மனஉளைச்சல், கவலை, கழுத்துவலி, தூக்க மயக்கம், தூக்கமின்மை போன்றவற்றிற்கும் உள்ளாவதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.