செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்லப் போகும் மனிதர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

344

space-shuttle-endeavor

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது எண்டீவர் விண்கலத்தில் ஆய்வுகூடம் மட்டுமே உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் 2033ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா மையம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது.

ஆனால் நாசாவின் இந்த தீவிர முயற்சியை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்து வருகிற 2021ம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புகிறது. அதற்காக 3 பேர் குழு பயணம் செய்யும் விண்கலத்தை வடிவமைத்து வருகிறது.

லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்த குழுவின் தலைவர் பேராசிரியர் டொம் பைக் கூறும்போது, செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதுதான் அடுத்த மிகப்பெரிய இலக்காக கருதுகிறோம்.
அதன் மூலம் சந்திரனின் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ரோங் புஷ் அல்ட்ரினின் சாதனையை 21ம் நூற்றாண்டில் நிகழ்த்த போகிறோம்.

மனிதர்களை அனுப்பும் அதே நேரத்தில் மற்றொரு ரொக்கட்டில் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதிக்கு ரோபோக்களை அனுப்ப இருக்கிறோம். அவை அங்குள்ள ஐஸ் படிவங்களை வெட்டியெடுத்து ஆய்வு மேற்கொள்ளும்.

அதே நேரத்தில் அங்கு செல்லும் 3 பேர் கொண்ட குழு 9 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள். புவியீர்ப்பு சக்தி கிடைக்காத காரணத்தால் அவர்களின் உடல் எடை மற்றும் தசை மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, அவர்களின் உடல் நிலை பாதிக்காத வகையில் பயணம் செய்யும் விண்கலம் அதிநவீன முறையில் விசேஷமாக வடிவமைக்கப்பட உள்ளது என்றும் விஞ்ஞானி பைக் தெரிவித்துள்ளார்.