இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு : 5 வான்கதவுகளும் திறப்பு!!

329

வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகரித்த நீா் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஜந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடா்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுமானால் மேலும் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் சுதாகரன் அவா்கள் குறிப்பிட்டார்

குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இவ்வடம் குளத்தின் நீா் மட்டத்தினை 24 அடியாக வைத்திருப்பதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்போது குளத்தின் நீா் மட்டம் இன்று காலை 28 அடி 5 அங்குளமாக காணப்பட்டுள்ள நிலையில் குளத்தின் ஜந்து வான் கதவுகள் ஒரு அடி வரை திறக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இன்று குளத்திற்கு விஜயம் செய்த இயற்கை வளங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சா் காமினி ஜெயவிக்கிரம பெரேரா அவா்களும் குளத்தின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.

e e1 e2 e3