எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்!!

451

aids

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகள் மயானத்தில் வாழ்ந்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர்.

இதையடுத்து எங்கே தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில் கிராமத்தினர் சேர்ந்து அந்த தம்பதியின் ஒரு பெண், 4 ஆண் குழந்தைகளை ஊரை விட்டே விரட்டினர். 7 முதல் 17 வயது வரை உள்ள அந்த 5 குழந்தைகளும் போகும் இடம் தெரியாமல் தங்கள் பெற்றோர் புதைக்கப்பட்ட மயானத்தில் வசித்து வருகின்றனர்.

மயானத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தார்பாலின் பாய் போட்டு 2 உடைந்த கட்டிலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மயானத்தில் குழந்தைகள் தங்கியிருந்தால் அங்கு அடக்கம் செய்யப்பட்ட தங்கள் உறவினர்களின் கல்லறைகளின் தூய்மை கெட்டுவிடும் என்று கிராமத்தினர் கருதுகின்றனர். அதனால் அந்த குழந்தைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட அரசு அந்த குழந்தைகளுக்கு இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கியுள்ளது.