திருக்குறளை சுட்டிக்காட்டி தமிழில் உரையாற்றிய மோடி!!

326

Pm-Modiமலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களிடையே நேற்று பேசினார். நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, முதலில் “வணக்கம் மலேசியா” என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார்.

பின்னர், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி, இந்தியாவிற்கும், மலேசியாவிற்குமான நட்பை விளக்கினார். மேலும், ’இந்திய விடுதலைக்காக போராடிய காந்தியே, திருக்குறளை படிப்படிதற்காகவே தமிழ் மொழியை கற்க வேண்டும் என்று விரும்பினார். அதே நட்புடன் தான் தற்போது மலேசியா வந்துள்ளேன்.’ என்றார் பிரதமர்.

மேலும் அவர் பேசுகையில்,

´மலேசியாவில் உள்ள 8 சதவீதம் இந்திய பூர்வீக மக்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியம். என்னை பொறுத்தவரை, இந்தியா ஒரு எல்லையோடு நின்றுவிடவில்லை. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் இந்தியா உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

குஜராத் பூகம்பத்தின் போது மலேசிய இந்தியர்கள் உதவி செய்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்தியாவும் மலேசியாவும் நெருக்கமான நட்புறவு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் இந்தியர்கள் கலாச்சார நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

உரையின் முடிவில் மற்றொரு தமிழரான மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது ’வித்தியாசமாக சிந்திக்க தைரியம் வேண்டும். முடியாததை கண்டறிய வேண்டும்.’ என்ற கலாம் வரிகளை குறிப்பிட்டார்.
முகப்பு Print Send Feedback

Share/Bookmark