வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

730

faculty2

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அம் மாநாடானது வணிக் கற்கைகள் மீதான ஆய்வு மாநாடு 2016 என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. அந்த வகையில் உண்மையான உலக வணிக சவால்களுக்கான ஆய்வு ரீதியான தீர்வுகள் என்பதாக இதன் தலைப்பு அமைந்துள்ளது.

அந்தவகையில் கீழ்வரும் தலைப்புகளில் நாம் ஆராய்ச்சி கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம். அவையாவன,

  • கணக்கீடும் நிதியும்
  • விவசாய வணிகம்
  •  வணிக் தகவல் முறைமைகள்
  •  வணிக் தொடர்பாடல்
  •  அனர்த்த முகாமைத்துவம், முயற்சியாண்மை
  •  மனித வள முகாமைத்துவம்
  •  அறிவு முகாமைத்துவம்
  •  சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
  • செயற்பாடு மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவம்
  • திட்ட முகாமைத்துவம்
  • தந்திரோபாய முகாமைத்தவம்
  •  சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்

போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எனவே இக் கட்டுரைகளை சர்வதேச ரீதியிலும் இலங்கையில் இருந்தும் எதிர்பார்கின்றோம். இந் நிலையில் அடுத்தவருடம் ஆனி மாதம் 24 ஆம் திகதி இம் மாநாடு இடம்பெறவுள்ளதால் கட்டுரைகளை தை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் மாநாட்டில் பங்கேற்கவுள்ளவர்களும் ஆனி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது

எனவே http://www.vau.jfn.ac.lk/fbs/rcbs/index.htmlஎன்ற இணையத்திளத்தின் மூலம் ஏனைய தகவலை அறியலாம் என்பதுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாக பதிவுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

webflyer