பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!!

794

APTOPIX Pakistan Bhutto Return

பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது முஸ்லிம்கள் புனித ரம்லான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அதை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு சில இடங்களில் நேட்டோ படையினருக்கு எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீதும், ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், ஷியா பிரிவை சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்ரம் பழங்குடியினர் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகளை வீசியதில் 40 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குர்ரம் பகுதியில் பராசினார் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு 20 தேனீர் கடைகள் தகர்க்கப்பட்டன. மேலும் கடை வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 90 வாகனங்கள் தீக்கிரையாயின.