வவுனியா தமிழ்மான்றத்தின் ‘வாசிப்பும் அனுபவப்பகிர்வும்’ அழைப்பிதழ்!!

587

Tamil maamanram

இன்றைய இளம் சமுதாயத்திற்கு, வாசிப்பு மீதான ஆர்வத்ததை ஏற்படுத்தும் பொருட்டும், வாசிக்கும் திறனை விருத்தி செய்யும் நோக்குடன், நல்ல படைப்புகளை அறிமுகம் செய்யும் நோக்குடனும் வாசிப்பு தொடர்பான தொடர் நிகழ்வுகளை தமிழ் மாமன்றம் நடாத்தி வருகின்றது.

அந் நிகழ்வின் தொடர்ச்சியாக, நூலக பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், வவுனியா பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு மாதம் இரு முறை தொடர்ச்சியாக ‘வாசிப்பும் அனுபவப்பகிர்வும்’ எனும் நிகழ்வினை நடாத்த தமிழ்மான்றம் உத்தேசித்துள்ளது.

ஒரு நிகழ்வில், இரு படைப்புக்கள் தொடர்பான பகிர்வுகள் இடம்பெறும். படைப்பை நுகர்த ஒருவர் அப்படைப்பு தொடர்பான பகிர்வினை மேற்கொள்வார். அப் படைப்பு ஏற்படுத்திய தாக்கம், அப் படைப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது, அப் படைப்பினூடக சொல்ல வந்த செய்தி என்ன, போன்ற விடயங்கள் பகிரப்படும்.

அதன் பின்னர், அப் படைப்பு நுகர்ந்த ஏனையோர் மற்றும் அப் பகிர்வில் பங்கேற்றவர்களுடான கலந்துரையாடல் இடம் பெறும்.

அதனடிப்படையில், டிசம்பர் மாதத்திற்கான முதல் நிகழ்வு, எதிர் வரும் 05.12.2015 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில், தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டு, சுந்தரராமசாமி அவர்களால் தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்ட, மீனவ சமுதாயத்தின் வாழ்வியல் போராட்டங்களையும், அவர்களுடைய சாதிய அமைப்புக்களையும், அதன் சிக்கல் தன்மைகளையும் ஒரு காதல் கதையின் மூலமாக படைக்க பட்ட, கேரளத்தின் மிக உன்னத காதல் காவியமான “ செம்மீன்” எனும் நாவலும், அந் நாவலின் ததையை மூலமாகக் கொண்டு ராமு கார்யாட்டு இயக்கிய மலையாள திரைப்படம் பற்றிய பகிர்வும் இடம் பெறவிருக்கின்றது.

அத்துடன், கவிக்கோ அப்துல் ரகுமானால் எழுதப்பட்ட, சமுதாயத்தில் கண்ட அக்கிரமங்களையும், அசிங்களையும், அவலங்களையும் கண்டு, கொந்தளித்து, சமுதாயத்தினுடைய சீரழிவுக்கு காரணமாய் விளங்கும், குறிப்பிட்டவர்களையும், குறிப்பிட்டவைகளையும் நோக்கி நீட்டப்பட்ட “சுட்டுவிரல்” எனும் கவிதைத் தொகுப்பும் பகிரப்படவிருக்கினறது.

நாவல், கவிதை என்கின்ற இரு படைப்புகளின் பகிர்வுகளிலும் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைவரையும் தமிழ் மாமன்றம் அன்புடன் அழைக்கின்றது.