வவுனியா சுகாதார திணைக்களத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திரு.இ.இரவிச்சந்திரன் (மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர்), வைத்திய கலாநிதி எஸ்.லவன் (சுகாதார வைத்திய அதிகாரி வவுனியா) என்.மகேந்திரன்( வைத்திய கலாநிதி), யூட் பீரிஸ் (வைத்திய கலாநிதி), திரு.கா. உதயராஜா (வவுனியா பிரதேச செயலாளர்), வைத்திய கலாநிதி திருமதி.வி.பசுபதிராஜா (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியா),
திரு.தர்மேந்திரா (வவுனியா நகரசபை செயலாளர்), திருமதி. சுகந்தி கிஷோர் (செயலாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை), திரு.க. மேஜெயா (மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்) மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச திணைக்கள ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் டெங்கு சித்திரப் போட்டியில் நுளம்பு பெருக்கமற்ற திணைக்களங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை ரீதியில் நுளம்பு பெருக்கமற்ற பாடசாலை தெரிவில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மற்றும் உணவு கையாளும் நிலையங்களின் தரப்படுத்தல் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
![P1010025[1]](https://i0.wp.com/www.vavuniyanet.com/wp-content/uploads/2015/12/P10100251.jpg?resize=640%2C480)






