வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர்- வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு!!

498

வவுனியாவின் புதிய அரசாங்க அதிபர் திரு.ரோகன புஸ்பகுமார அவர்களுக்கும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு நிகழ்வு நேற்று (03.12.2015) நடைபெற்றது .

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) தலைமையில் இடம் பெற்ற இந்த சந்திப்பு நிகழ்வில் செயலாளர் தேசமான்ய க.சிவஞானம், உறுப்பினர்கள் கோபிநாத், கருணாநிதி, கிறிஸ்டோபர், மாணிக்கம் ஜெகன், அமுதன் உட்பட போசகர்களான ரோய் ஜெயக்குமார், இறைபணிசெம்மல் வை.செ.தேவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபரை கெளரவித்து சுமார் அரை மணி நேரம் வவுனியாவின் அபிவிருத்தி பணிகள் பற்றி கலந்துரையாடி இருந்ததுடன் அனைவரையும் வவுனியாவின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்கும்படி அரச அதிபர் கேட்டு கொண்டார் . அனைவருடனும் தமிழில் அவர் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

DSCN9579 DSCN9580 DSCN9581 DSCN9583 DSCN9585 DSCN9586 DSCN9588 DSCN9590 DSCN9591 DSCN9595 DSCN9598 DSCN9605