வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்!!(படங்கள்)

684

தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச வனப்பகுதிகளில் விடப்பட்ட யானைகள் (வளர்ப்பு யானைகள் என சந்தேகிக்கபடுகின்றது) கிராம மக்களை பெரும் அவதிக்குள்ளான சூழ்நிலையில், வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சூறையாடிச்செல்கின்றது.

இதனால் நெடுங்கேணி பிரதேச மக்கள் பெரும் அசெளகரியதில் வசித்து வருகின்றனர்.

கடந்த 02.12.2015 அதிகாலை அளவில் நெடுங்கேணி சேனப்பிளவு எனும் இடத்தில் மரவள்ளி மற்றும் வாழைத் தோட்டங்களை 5 யானைகளினால் துவம்சம் (சேதம்) செய்யப்பட்டது.

இதனை வட மாகாணசபை உறுப்பினர் கொவரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இது தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

20151202_094635 20151202_094810 20151202_094816 20151202_111146