வவுனியா வெளிக்குளம் க.உ. வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு விழா!!

619

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04.12.2015) காலை 10 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.M.P.நடராஜ், திரு.G.T.லிங்கநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஞா.இளையதம்பி (கோட்டக்கல்வி அதிகாரி), திரு.S.கணேசபாதம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆரம்பக் கல்வி),

மற்றும் கௌரவ விருந்தினர்களாக திருமதி S.விஜயகாந்தன்(ஆசிரிய ஆலோசகர்), திருமதி த.அருணகிரி (ஆசிரிய ஆலோசகர்), செல்வி க.பவித்ரா (கிராம அலுவலர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாண்ட் வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

DSC00753 DSC00755 DSC00765 DSC00773    DSC00803 DSC00809 DSC00818 DSC00830 DSC00831 DSC00833 DSC00854 DSC00859 DSC00870