சென்னை விமான நிலையம் இன்று முதல் பகுதி நேரமாக செயல்படும்!!

594

chennai_airport1

தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் இன்று முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத தொடர் கனமழையால், அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளநீர் வடிந்துள்ளதால் இன்று சனிக்கிழமை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்றும், முதல் கட்டமாக நிவாரண உதவிகளை கொண்டு வரும் விமானங்களே தரையிறக்கப்படும் எனவும் இந்திய விமான நிலையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் காலை 6 மணி முதல் இயற்கை வெளிச்சம் இருக்கும் வரை இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அது்துடன், அங்கு நிலைமை மேம்படுவதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 5.30 நிலவரப்படி விமான ஓடுபாதையில் இருந்த நீர் வடிந்து விட்டது என்றும், குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டன எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இதர பணிகள் பரிசோதிக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளனர்.