தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬!!

883

‪வவுனியா‬ பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் தலைமையில் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (05.12.2015) காலை 09.00 மணி தொடக்கம் மதியம் 02.00 மணிவரை நடைபெற்றது.

ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொது மக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் வைத்திய கலாநிதி ஹெடியாராச்சி,

ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி. அனுசியா, தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், கழகத்தின் உறுப்பினர்களான கஜீபன், முகுந்தன், சுஜீபன், கோகுலதாசன், ரூபதரன்,நிலக்சன், மற்றும் பல குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

‪வவுனியாவில்‬ ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகமானது இலங்கையின் பல பாகங்களில் தமிழர்களது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபட்டு இருக்கும் அதே வேளையில் தொடர்ந்து நாடு பூராகவும் 03 வது தடவையாக இரத்ததான முகாமை வெற்றிகரமாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

IMG_2705 IMG_2708 IMG_2711 IMG_2712 IMG_2713 IMG_2715 IMG_2716 IMG_2717 IMG_2718 IMG_2719 IMG_2722 IMG_2724 IMG_2727 IMG_2732 IMG_2737 IMG_2738 IMG_2743 IMG_2747 IMG_2750 IMG_2764 IMG_2766 IMG_2772 IMG_2794 IMG_2798 IMG_2803 IMG_2811 IMG_2812 IMG_2818 IMG_2819 IMG_2826 IMG_2829 IMG_2834 IMG_2835