வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர் திரு.சு.கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டுவிழா கடந்த 05.12.2015 அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களான வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, கி.உதயகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர் -வவுனியா தெற்கு வலயம்) கெளரவ விருந்தினராக இ.விசாலிங்கம் (முன்னாள் மாகாணக் கல்விப்பணிப்பளர் -வடக்கு கிழக்கு மாகாணம்) மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனக் கலந்துகொண்டு ஓய்வுபெற்ற அதிபருக்கான கெளரவத்தை வழங்கினர்.
மேலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.






