வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்தவப் பிரிவினால் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயல்முறை பயிற்சித்திட்டம் இடம்பெற்றது.
தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு எம்மையும் எமது அலுவலகத்தினையும் பொது மக்களையும் பாதுகாத்துக்கொள்வது எனும் செய்றிட்டம் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமான இச் செயற்றிட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு. எஸ்.சூரியகுமார், உதவி மாவட்ட செயலாளர் திரு. நா.கமலதாசன், வன்னி மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் திரு.எம்.எச்.எம்.நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.






