வவுனியா மாவட்ட செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளிகளில் செயலக உற்பத்தித்திறனை ஊக்குவித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
திங்கட்கிழமை இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான செயலமர்வாக நடைபெற்றது.
சுமார் 120 முன்பள்ளி ஆசிரியர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
5எஸ் எனப்படும் இச் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரிதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் கா.உதயராஜா மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இரு நாள் செயற்பட்டறையில் வளவாளராக திரு. சி.கோணேஸ்வரன் கலந்துகொண்டார்.






