இறந்து விட்டதாக கருதப்பட்ட மாணவர் உயிருடன் வந்த அதிசயம்!!

542

body

இந்திய ஒரிசா மாநிலம் காகிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது மாணவன் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 8ம் திகதி முதல் காணவில்லை.

எனவே அவரது தந்தை பொலிஸில் புகார் தெரிவித்ததையடுத்து பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது ஊர் அருகே உள்ள காட்டில், அழுகிய சடலமொன்று கிடந்துள்ளது.

அந்த சடலம் லோசன் காடிதாவாக இருக்கலாம் என்று சந்தேகித்த பொலிசார், அவரது தந்தையை அடையாளம் காட்ட அழைத்து வரவே, அவரும் இது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டிருப்பது லோசன் காடிதா என தெரிய வந்ததையடுத்து, அவரின் உடலை அவரது தந்தை எடுத்து சென்று இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து லோசனை அவரது நண்பர்கள் 6 பேர் கொலை செய்து இருக்கலாம் என்று தந்தை பொலிஸில் புகார் தெரிவிக்கவே அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட லோசன் காடிதா திடீரென வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவை பார்க்க சென்றதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து காட்டில் கிடந்த பிணம் யாருடையது என பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.