வவுனியா பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகள் மீண்டும் திறப்பு!!

525

11

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், அதன் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் 4 வான்கதவுகளும் 9 இஞ்சி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், வவுனியா – செட்டிகுளம் நோக்கிய போக்குவரத்து பாதைகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடக் கூடிய வாய்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.