வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் செல்லும் வீதி, வவுனியாவிலிருந்து கல்மடு செல்லும் வீதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கும் விபத்திற்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவிலிருந்து பிற பிரதேசங்களக்கு செல்லும் பிரதான வீதிகளில் கால்நடைகள் வீதியில் படுத்திருப்பதால் குறிப்பாக மாடுகளால் வீதியால் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்கிய சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றது.
தற்போது மழையுடன் கூடிய காலமாவதால் கால்நடைகளை உரிமையாளர்கள் கவனத்தில் எடுப்பது கிடையாது. குறிப்பாக இப் பிரதான வீதிகளிலே அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுகிறது.
கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டிவைத்து பராமரித்தால் கால்நடைகள் வீதிகளுக்கு வரவேண்டிய தேவைப்பாடு கிடையாது. அத்துடன் குறிப்பிட்ட பிரதேசத்திலிருக்கும் அமைப்புக்கள் இது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்து அதனால் எற்படும் பாதகமாக நிலையினை கூறி அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதும் கிடையாது.
இக்கட்டாக்காலி கால்நடைகள் குறித்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது முக்கிய கலந்துரையாடல் காரணமாக யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த வீதிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் வரும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.






