வவுனியா வைத்தியசாலையின் சாரதி உதவி ஊழியர் மீது தாக்குதல்!!

603

thumb

வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் காவுவண்டியில் பணிபுரியும் சாரதி ஒருவர், காவு வண்டியில் உதவியாளராக செல்லும் வைத்தியசாலையின் ஊழியர் மீது கடந்த 10.12.2015 அன்று தாக்குதல் மேற்கொண்டள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார். இது குறித்தது மேலும் தெரியவருகையில்,

வைத்தியசாலையின் இரத்த வங்கியின் காவு வண்டியில் பணிபுரியும் விஜயமோகன் என்பவர் கொழும்பிலிருந்து மாற்றலாகி வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இரத்த வங்கியின் செயற்பாடுகளுக்காக வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு இரத்தம் கொடுப்பது பெறுவது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கான காவு வண்டியின் சாரதியாக பணியாற்றுகின்றார்.

இவருடன் உதவியாளராக ஒருவரும் பயணிக்கிறது வழமையான விடயம். இவர்களுடன் பயணிக்கிறவர்கள் வைத்தியசாலையின் கண்காணிப்பு மேற்பார்வையாளரிடம் சிபாரிசு பெற்று காவுவண்டியில் செல்வது வழமையான விடயம்.

சம்பவம் இடம்பெற்ற போது அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்று விட்டு வந்துள்ளனர். இவருடன் உதவிக்கு சென்றுவருபவர் காவுவண்டியை சுத்தம் செய்வது வழமையாகும். குறித்த நபர் வண்டியை சுத்தம் செய்வதற்கு சாரதியின் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

காவு வண்டியை சுத்தம் செய்யும் இடத்திற்கு விடும்படி கூறுவதற்கு அவருடனான அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு தடைவை மேற்கொண்டுவிட்டு அப்படியே விட்டு விட்டார். காவு வண்டியின் சாரதி வண்டியை சென்று பார்த்ததுள்ளார். காவுவண்டி சுத்தம் செய்யப்படவில்லை.

உதவியாளரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி வரும்படி கூறியுள்ளார். உதவியாளர் வந்ததும் காவு வண்டியை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் ‘உங்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டேன் நீங்கள் அழைப்பையும் மேற்கொள்ளவில்லை’ வண்டியையும் சுத்தம் செய்யும் இடம்த்தில் நிறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாரதி தனது பாணியில் உதவி ஊழியரின் சட்டையைப்பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊழியர் இரத்த வங்கியில் பணிபுரியும் வைத்தியரிடம் முறையிட்டதையடுத்து வைத்தியசாலைப்பணிப்பாளரிடம் முறையிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து பணிப்பாளரிடம் முறையிடப்பட்டதையடுத்து பணிப்பாளர் எழுத்து மூல அறிக்கையினைப் பெற்றுவிட்டு விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளார். இது சம்பவம் இடம்பெற்ற அன்று மேற்கொள்ளப்பட்ட விடயம்.

நான்கு நாட்கள் கடந்தும் சாரதிமீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. தாக்குதலுக்குள்ளானவர் சுகயீன விடுமுறையில் உள்ளார். சாரதி மீது விசாரணை மேற்கொண்டால்தான் தான் பணிக்கு திரும்புவதாக தெரிவித்து வருகின்றார்.

அத்துடன் சாரதி பற்றி தெரியவருகையில் இவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், எற்கனவே தண்டனை பெற்று மாற்றலாகி வவுனியா வைத்தியசாலைக்கு பணிக்கு வந்துள்ளார்.

இவர் ஏற்கனவே நான்கு வவுனியா வைத்தியசாலை ஊழியர்களை தாக்கியுள்ளார். எனினும் அவரின் மிரட்டல் காரணமாக அவர்கள் யாரிடமும் முறையிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பணியாளர் போன்று செயற்படுவது கிடையாது என்றும் மிரட்டும் சுபாவம் மற்றும் தலைமுடி வளர்த்து காணப்படுவதாகவும் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான ஊழியர் இவர் மீது விசாரணை மேற்கொண்டு, இவர் மறுபடியும் தன் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் பாதுகாக்குமாறு தனது முறைப்பாட்டடில் தெரிவித்துள்ளார்.

01 comp 02 compl