வவுனியா வயல்களில் வேண்டுமென்று கால்நடைகளை மேயவிடும் இப்படியும் சில மனிதர்கள்!!

542

வவுனியா தாண்டிக்குளம் குளத்தை அண்மித்த பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் செய்யப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் ஒரு சிலர் வேண்டுமென்று வளர்ப்பு மாடுகளை வயல் வேலி முட்கம்பிகளை வெட்டி வயலிற்குள் மேயவிடுவதாக பாதிக்கப்பட்டோர் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தாம் வயல்களுக்கான முட்கம்பி வேலிகளை முறைப்படி அமைத்துள்ளபோதும் ஒருசிலர் முட்கம்பி வேலிகளை வெட்டி தமது மாடுகளை வயல்களுக்குள் மேயவிடுவதாகவும் இதனால் தமது பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

சுயநலமாக சிந்திக்கும் ஒருசிலர் செய்யும் இப்படியான செயல்களால் பலர் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கால்நடைகளை வளர்ப்போரில் பலர் முறைப்படி மாடுகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைக்காது வீதிகளில் தங்கவிடுவதால் வீதிகளில் பயணிப்போர், வாகன சாரதிகள் உட்பட பலர் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல்வேறு விபத்துக்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6