வவுனியாவில் அண்மையில் பெய்த மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிகப்பட்டிருந்தன. அந்த வகையில் பாதிக்கப்பட்ட கிராமங்களான புதிய கற்குளம், பழைய கற்குளம், சிதம்பரபுரம் மற்றும் ஏனைய கிராமங்களை சேர்ந்த மக்களை வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினர்.
மக்களின் உடனடி தேவைகள், அனர்த்தத்தால் எற்பட்ட சேதங்கள், கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






