வீட்டை பராமரிக்காததால் 6 மாதம் சிறை: அதிர்ச்சியில் வயதான தம்பதியர்!!

260

couple_face_fine_002

கனடாவில் வீட்டை பராமரிக்க தவறிய உரிமையாளருக்கு அபராதமும் 6 மாத சிறையும் விதிக்கப்படும் என நகரசபை அதிகாரிகள் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வின்னிபெக் பகுதியில் தமது மனைவியுடன் குடியிருந்து வருபவர் 76 வயதான Rodney Pearson.கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வரும் இந்த தம்பதியர், தங்களது வீட்டின் பின்பகுதியை சரிவர பராமரிக்கவில்லை எனவும்,

அது அப்பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய வீட்டு உரிமையாளர்களை சங்கடப்படுத்துவதாக கூறி வின்னிபெக் நகர அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.வின்னிபெக் நகரில் இதுபோன்று பராமரிக்கப்படாத வீட்டு உரிமையாளர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கியுள்ளனர்.

இந்த கால அவகாசத்திற்குள் புது வண்ணம் பூசி பராமரிக்காத வீட்டு உரிமையாளர்களுக்கு 1000 டொலர் அபராதமும் 6 மாதங்கள் வரை சிறையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.இந்நிலையில், Rodney தம்பதிகள் தங்களுக்கு நகரசபை அளித்துள்ள கால அவகாசத்தினுள் தங்களது வீட்டின் பராமரிப்பை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும், நகரசபை அதிகாரிகளின் கடிதம் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரசே முன்வந்து இதுபோன்ற உதவிகளை இயலாத மக்களுக்கு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைந்து இந்த குளிர்காலத்தில் அந்த வயதான தம்பதியருக்கு உதவி செய்தால் அதுவே அவர்களுக்கு தரும் கிறிஸ்துமஸ் பரிசாகவும் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.