காலையிலேயே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

786

hand-in-water

குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளத்திற்கு மேலாக கட்டப்பட்டிருந்த மதகின் மேலால் நான்கு சிறுவர்கள் முகம் கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர். இதன் போது இரண்டு சிறுவர்கள் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.