வவுனியாவில் புலம் பெயர் உறவுகளின் நலன் வேண்டி விசேட பூசை நிகழ்வு!!(படங்கள்)

541

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினமான இன்று (18.12.2015 வெள்ளிக்கிழமை தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் சிவஸ்ரீ கேசவகுருக்கள் தலைமையில் புலம் பெயர் உறவுகள் நிம்மதி, சந்தோசம், நலமாக இருக்க வேண்டி விசேட பூசை நிகழ்வு காலை 7.30 மணிக்கு நடைபெற்றது .

இந்த பூசை நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் இணைப்பாளர் செ.மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியர் இ.எஸ்.வரதன், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.ராஜலிங்கம், கலைமகள் நற்பணி மன்றத் தலைவர் சிந்துஜன், அஸ்திரம் நற்பணி மன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வர்த்தகர் சிவசுப்பிரமணியம், விக்னா, முன்னாள் வங்கி முகாமையாளர் தேவராசா, ஊடகவியலாளர் வசந்தன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

புலம் பெயர் உறவுகள் பலரின் பெயர், நட்சத்திரங்கள் சிவஸ்ரீ கேசவகுருக்களால் உச்சரிக்க பட்டு விசேட பூசை நிகழ்த்தபட்டதன் பின்னர் நெய்தீபங்கள் ஏற்றி கலந்து கொண்ட அனைவரும் புலம் பெயர் உறவுகளுக்காய் வேண்டிக் கொண்டனர்.

FILE005 FILE006 FILE007 FILE014 FILE021 FILE025 FILE026 FILE032 FILE033 FILE036 FILE037 FILE038 FILE040 FILE041 FILE045 FILE049 FILE051 FILE053 FILE054 FILE059 FILE069 FILE076