குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்வோரை தேடும்பணி நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் வெற்று போத்தல்களில் முறையற்ற வகையில் நீரை நிரப்பி முக்கியமான இடங்களில் விற்பனை செய்வதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமையவே, நேற்று முதல் இதற்கான தேடுதல்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்கள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வியாபாரிகள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ளார்களா என்பது பரிசீலிக்கப்படவுள்ளது.
இதேவேளை குடிநீர் மாதிரிகள் சோதனைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.