சட்டசபையில் நடிகை ரோஜாவுக்கு ஒராண்டுத் தடை!!

628

Roja

முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை தகாத வார்த்தையால் விமர்சித்ததாக கூறி நடிகை ரோஜாவுக்கு ஆந்திர பிரதேச சட்டசபையில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு குறித்து அவதூறாக பேசிய புகாரில் சபாநாயகர் சிவபிரசாத் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது தொடர்பில் ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டித்து குரல் கொடுக்கிறேன். ஆனால் தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி வாக்களித்த பெண்களுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து விட்டார்.

எனக்கு ஒரு ஆண்டுக்கு தடை விதிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை என்றார்.

இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆலோசனை நடத்தி உள்ளனர்.