வவுனியா தமிழ் மாமன்றத்தின் இம் மாதத்திற்கான இரண்டாவது வாசிப்பும் அனுப்பவப்பகிர்வும் நிகழ்வு!!(படங்கள்)

633

வவுனியா தமிழ் மாமன்றத்தின் இம் மாதத்திற்கான இரண்டாவது வாசிப்பும் அனுப்பவப்பகிர்வும் நிகழ்வு நேற்று (19.12.2015) மாலை 3 மணியளவில் வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், நூலக வாசகர்கள், வாசிப்புத் துறை சார்ந்த ஆர்வமுடையோர், மாணவர்கள் என பலதரப்பட்ட அதிகளவான ஆர்வலர்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஒரு நிமிட அக வணக்கத்தை தொடர்ந்து, முதலாவது பகிர்வு பகிரப்பட்டது.

முதலாவது பகிர்வாக அருந்ததி ராய் அவர்கள் எழுதிய “The God of Small Things” இன் தமிழ் மொழி பெயர்ப்பான “ சின்ன விஷயங்களின் கடவுள்” எனும் ஜி.குப்புசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் ஜே.சாள்ஸ் அவர்களால் பகிரப்பட்டது.

அப் பகிர்வில், அந் நாவல் எதை சார்ந்தாக இருக்கின்றது, சின்ன விடயங்களின் கடவுள் என்பது என்ன போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்;டதோடு, அது சார்ந்த விவாதங்கள் வருகை தந்திருந்த ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அந் நூலின் ஆசிரியர் அருந்ததி ராய் பற்றிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டு, தர்க ரீதியலான, ஓர் சிறந்த கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து இன்றைய நிகழ்வின், அடுத்த பகிர்வான, அருங்கவிஞர் ஆனந்தரவி அவர்களால் எழுதப்பட்ட, “முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” எனும் கவிதை தொகுதி தெ.மிதிலைமாறன் அவர்களால் பகிரப்பட்டது.

முதியோர்கள் எப்படி கவனிக்கப்படுகின்றார்கள்? முதியோர்கள் இல்லங்கள் அவசியமா? என்ற வினாக்களை மனதில் எழுப்பும் விடயங்களை கவிதைகளும், இந்த சமூகம் சார்ந்த பல விடயங்களை சாடுகின்ற கவிதைகளும் அடங்கியதாக அக் கவிதைத் தொகுதியின் பகிர்வு அமைந்திருந்தது.

அக் கவிதைத் தொகுதியிலுள்ள சில முக்கியமான கவிதைகள் தெ.மிதிலைமாறன் அவர்களால் சிறப்புற நயக்கப்பட்டது. அத்துடன் அக் கவிதைகள் சார்ந்த ரீதியிலும் தன்னுடைய கருத்துக்களையும் சில விடயங்களையும் தெளிவு படுத்தி அப் பகிர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வினைத் தொடர்ந்து, முதியோர் இல்லங்களும், அங்கிருக்கின்ற முதியவர்களின் நிலைமைகள் அவர்களின் மனப்போக்குககள் போன்ற விடயஙக்ளும், அக் கவிதைப் புத்த்கத்திலுள்ள கவிதைகள் சார்ந்த கருத்துக்களும், பகிர்வில் பங்கு பற்றிய ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டு ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாமன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற வாசிப்பும் பகிர்வும் நிகழ்வின் நூலக நிகழ்வுகளின் வரிசையில் மூன்றாவது நிகழ்வு எதிர்வரும் 09.01.2016 சனிக்கிழமை, மாலை 3 மணிக்கு வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அப் பகிர்வில், வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்” எனும் நாவல், ஞா.வசந்தசீலன் அவர்களாலும், அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ எனும் கவிதைத் தொகுதி பா.சிலோஜினி அவர்களாலும் பகிரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2015-12-19-15-35-39-251 2015-12-19-15-59-39-986 2015-12-19-16-00-26-171 2015-12-19-16-56-52-044 4015-12-19-16-40-43-022 4015-12-19-16-47-35-281 4015-12-19-17-05-16-018 20151219_161821 1412666_994457483951516_4239924906038851390_o 10344132_994457563951508_5516352875525089202_o 12365978_994457477284850_7729334845632981243_o40151219_161730