வவுனியாவில் டெங்கு பரவல் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்!!(படங்கள்)

634

வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று (20.12.2015) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகரசபைச் செயலாளர் எஸ். தர்மேந்திரா, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எஸ். லவன், பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் க.மேஜெயா, சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், வர்த்தக சங்கத் தலைவர், வியாபார நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விழிப்புணர்வு கலந்துரையாடலில் நகரசபைச் செயலாளர் உரையாற்றுகையில்,

நடைபாதையில் வியாபாரத்தினை மேற்கொள்பவர்கள் நகரசபையினால் அமைக்கப்பட்ட அங்காடி விற்பனை நிலையத்தில் நகர சபையின் அனுமதியினைப்பெற்று வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சனிக்கிழமை நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் டெங்கு பரவலைக்கட்டுப்படுத்த வியாபார நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

20151220_102109 20151220_102118 20151220_102932 20151220_102943 20151220_102947 20151220_103541 20151220_103552 20151220_104200 20151220_104216