20.11.2015 அன்று அமரத்துவம் அடைந்த அமரர் நா.சிதம்பரேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி நிகழ்வை முன்னிட்டு பிரான்சில் வசிக்கும் அவரது மகன் சதீஸ்குமாரால் வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்லத்து முதியவர்களுக்கு பாதணிகளும், மதிய உணவும் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக நேற்று (20.12.2015) வழங்கி வைக்கப்பட்டது.
சதீஸ்குமாரின் மனைவி பாமினி, மகன் சங்கீத் இவர்களுடன் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.






