வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வழங்கும் கவிஞர் செல்வி நந்தீஸ்வரி துரைராசாவின் நிலவே நீ சொல் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (24.12.2015) காலை 10 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் கலாச்சார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராஜா, வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு.ப.ஜெயபாஸ்கரன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.நா சேனாதிராசா, வவுனியா இந்து மாமன்ற போசகர் சிவநெறிப் புலரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.






