வவுனியா பரண்நட்டகல்லில் “பெரிய ஐயா” முன்பள்ளி திறந்துவைப்பு!!(படங்கள்)

533

வவுனியா பரண்நட்டகல்லு கிராமத்தில் பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் (ரி.ஆர்.ரி) சமுகப்பணி பிரிவின் ஊடாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட “பெரிய ஐயா” முன்பள்ளி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனால் நேற்று (27.12.2015) அன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பரண்நட்டகல்லு கிராம சேவையாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பாரியார் அருந்ததி சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ராஜேஸ்வரன், முன்னாள் கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி திரு.பேனாட், குருமன்காடு பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் சிவராசா, மற்றும் பரண்நட்டகல்லு மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி பவானி, முன்பள்ளி மழலைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த முன்பள்ளி நிர்மாணிப்புக்காக நிதியுதவி வழங்கிய அன்ரி அம்மா குடும்பம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும், நிதியுதவியை ஒழுங்கமைத்து உதவிய பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலிக்கும், அதன் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களும், கிராம மக்களும் தமது நன்றியை தெரிவித்தனர்.

20151227_105701 20151227_111225 20151227_111837 20151227_112103 20151227_112211 20151227_112421 20151227_112901 20151227_113244 20151227_113307 20151227_114222 20151227_114656 20151227_121110 20151227_121658 20151227_122824 20151227_123305 20151227_123339 20151227_123453 20151227_123536 20151227_123621 20151227_123632 20151227_123726 20151227_123756 20151227_123851 20151227_123927 20151227_124050 20151227_124233 20151227_125155