வவுனியாவில் கடையில் திருடிய திருடன் பொலிசாரிடம் சிக்கினான்!!

837

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலிருக்கும் சூசைப்பிள்ளையார்குளம் செல்லும் சந்திக்கு அருகிலிருக்கும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று 29.12.2015 அதிகாலை இரண்டு மணியளவில் பணம் மற்றும் சிகரட் போன்றவற்றை திருடிக் கொண்டு சென்றவரை அதிகாலை ரோந்தில் சென்ற பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த பழங்கள் விற்பனை செய்யும் நிலையத்தை ஒரு பெண்மணி தனது சகோதரனின் உதவியுடன் நடாத்தி வருகின்றார். இன்று அதிகாலை ஒருமணியவில் தனது வியாபார நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு கணக்குகளை சரிபார்த்தவிட்டு கடையுடன் இணைந்திருக்கும் தனது படுக்கையறைக்கு சென்று விட்டார்.

மழை பெய்துகொண்டிருந்த சமயம் என்பதால் திருடனுக்கு சாதகமாகிவிட்டது. குறித்த கடையின் முன்பக்கம் கம்பிநெற் அடைக்கப்பட்டிருந்தது. அதை பிரித்துக்கொண்டு உள்நுழைந்த திருடன் அங்கிருந்த பணம், சிகரட், அலைபேசிக்கு பயன் படுத்தும் மீள் நிரப்பும் அட்டை என்பனவற்றையும் ஒரு பொதியில் போட்டுக்கொண்டு சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதன் பின்னர் அவ்வீதியில் அதிகாலை பொலிசார் ரோந்து சென்றுள்ளனர். திருடன் பொலிசாரைக் கண்டதும் ஓட ஆரம்பித்துள்ளார் பொலிசார் திருடனை துரத்தி மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதில் பொலிசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை வாழைக்குலைக்கு பணம் கொடுப்பதற்கு உரிமையாளரான பெண்மணி காசாளர் மேசை திறந்திருந்ததை அவதானித்துவிட்டு கடையினை சுற்றி பார்வையிட்டபோது கடை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக தனது சகோதரனின் உதவியுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டபோது பொலிசார் திருடனை கைது செய்து தடுத்து வைத்திருப்பதும் திருடனிடமிருந்து பணம், சிகரட், மீள் நிரப்பு அட்டை என்பனவற்றை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட திருடனை கடைக்கு அழைத்து மேலதிக விசாரணைமேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA