8 ஆண்டுகள் தேடுதல் வேட்டை: பெண்களை பலாத்காரம் செய்த நபரை பிடித்த பொலிசார்!!

259

 
1 (8)

ஜேர்மனியில் 8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெண்களை பலாத்காரம் செய்து வந்த நபரை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது Cologne நகர பொலிசாரின் பிடியில் இருக்கும் 51 வயதுடைய அக்குற்றவாளி, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி 18 வயது இளம் பெண் ஒருவரை பவேரியா பகுதியில் வைத்து கற்பழித்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

அதன்பிறகு அப்பெண்ணை மீட்டு மருத்துவ உதவி அளித்த பொலிசார், அக்குற்றவாளியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர், மேலும் அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு 2,000 யூரோ சன்மானம் என அறிவித்தும் அவனை பிடிக்க முடியவில்லை.அன்பின்னர், 2 வாரங்களுக்கு பின்னர் அதே குற்றவாளி 42 வயதுடைய பெண்ணை Nuremberg எனும் நகரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளான், இதனைத் தொடர்ந்து பொலிசார் டிஎன்ஏ பரிசோதனை மூலம் நடைபெற்ற இரண்டு சம்பங்களுக்கும் இந்த நபர் தான் காரணம் என உறுதி செய்ததையடுத்து, அவனை பிடித்து கொடுத்தால் சன்மானமாக 3,000 யூரோவாக வழங்கப்படும் என அறிவித்தது.

இருப்பினும் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியவில்லை, இது தவிர 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் இக்குற்றவாளி, ஒரு பெண்ணை பாலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அப்பெண் இவரை எதிர்த்து சண்டையிட்டு தப்பித்துள்ளார்.இவ்வாறு ஜேர்மனியின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து குற்றங்களை செய்துவந்த இந்நபரை கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்த பொலிசார் இறுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் மேலே கூறப்பட்ட 3 சம்பவங்களுக்கும் இவன் தான் காரணம் என நிரூபணமானதால் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.