உள்ளூராட்சி ஆணையாளரால் மானியம் வழங்க அங்கீகரிக்கப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று(29.12.2015) காலை வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வவுனியா நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை, வெங்கல செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட 120 சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கி வைக்கப்பட்டது. இயங்கா நிலையிலுள்ள சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, எம்.பி.நடராஜ், ஜி.ரி. லிங்கநாதன், தர்மபால செனவிரத்ன, ஜயதிலக மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி.எம்.அசங்க காஞ்சன அகியோர் கலந்த கொண்டனர்கள்.






