வவுனியாவில் நடைபெற்ற நம்மாழ்வார் அவர்களின் இரண்டாம் வருட நினைவுக் கருத்தரங்கு!!

647

 
 
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (30.12.2015) இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி கே.நம்மாழ்வார் அவர்களின் இரண்டாம் வருட நினைவுக்கருத்தரங்கு நிகழ்வில் ‘தொற்றா நோய்களுக்கெதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் எம்.ரெட்னகாந்தன் தலமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொது கலாநிதி ந.ரவீந்திரன் இலங்கை மக்கள் சுறண்டப்படுவதை புரிந்துகொள்ளாத வகையில் அவர்கள் சிந்தனைகளை நச்சுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொற்றா நோய்களுக்கெதிரான செயற்பாடு, விவசாயத்தில் இரசாயனத்தின் பாவனைகளும் அதன் பாதிப்புக்களும், இயற்கைமீதான உலகமயமாக்கலின் தாக்கம், மற்றும் உலகமயமாதலின் பொருளாதார பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களை முறியடிப்பதற்கான எதிர்ப்பியக்க வடிவங்கள் எனும் தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் சமூகவிழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன், ஓய்வுபெற்ற அரசபண்ணை முகாமையாளர் ஏ.நடராசா, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் எஸ்.டொன்பொஸ்கோ, தேசியக்கல்வியற் கல்லூரி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் கலாநிதி நா.ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

உலகமயமாதலின் பொருளாதார பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களை முறியடிப்பதற்கான எதிர்ப்பியக்க வடிவங்கள் எனும் தலைப்பில் உரைநிகழ்த்திய தேசியக்கல்வியற் கல்லூரி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் கலாநிதி நா.ரவீந்திரன்
இந்த விவசாய பிரதேசத்திற்கு எந்த கொள்கை அவசியமோ அந்த கொள்கைக்கு எதிராக செயற்பட்ட ஒருவர் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மக்களுக்கு உண்மையான தகவல்கள் சென்றடைவது தடுக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினார். இலங்கை மக்கள் மீது அதிகமாக மேலாதிக்கம் செலுத்தும் நாடு இந்தியா எங்களை அதிகளவில் ஆக்கிரமித்திருப்பவர்கள் எங்கள் வளங்களை கொள்ளையடிப்பவர்கள் அவைகளை புரிந்துகொள்ளாத வகையில் எங்கள் சிந்தனைகளை நச்சுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

எங்களுக்குள் எதிரிகளாக செயல்படுவதை விடுத்து ஒன்றிணைந்து செயல்ப்பட வேண்டும் என தெரிவித்தார். இன்றைய இளைஞர்களுக்கு எந்த வடிவத்தில் கருத்துக்களை வழங்கப்போகிறோம் எனக் கேள்வி எழுப்பியதுடன் இன்று சிந்திக்காத ஒரு சமுதாயம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இன் நிகழ்வில் பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG_6507 IMG_6534 IMG_6536 IMG_6537 IMG_6583 IMG_6585 IMG_6587 IMG_6588