மாற்றங்கள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக புதியவருடம் அமையட்டும் : ப.உதயராசா!!

559

uthayarasa

பிறக்கின்ற புதிய வருடம் சகல மக்களுக்குமான மாற்றங்கள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.

காலம் காலமாக ஒவ்வொரு புதிய வருடப்பிறப்புக்களையும் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்று மாற்றங்களுக்காய் காத்திருக்கும் எமது மக்களின் அபிலாசைகள் நிவர்த்தியுறுகின்ற ஆண்டாக இவ்வாண்டு அமைய வேண்டுவதோடு பல ஆண்டுகளாக எமது மக்களின் ஒட்டு மொத்த வேண்டுதல்களான காணாமல் போனவர்களின் மீட்சி, அரசியல் கைதிகளின் விடுதலை, உயர் பாதுகாப்பு வலய விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, மீள்கட்டுமானம், போன்ற அடிப்படை எதிர்பார்ப்புக்களை தீர்ப்பதன் மூலமாக அனைத்து சமூங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதான நிரந்தர தீர்வினை நோக்கி பயணித்து வெற்றி பெற வழிசமைக்க பல தலைமுறைகளாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களின் எண்ணங்களில் மாற்றமேற்பட்டு மாற்றத்தை நோக்கி பயணிக்கும் வல்லமையினை இப்புதுவருடம் வழங்கிட வேண்டுமென பிரார்த்திப்போம்.

ப.உதயராசா
சிறீரெலோ
செயலாளர் நாயகம்